Thursday, November 13, 2025 10:29 am
இலங்கை தபால் சேவை மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான திட்டம் நேற்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் இந்த திட்டமானது தொடங்கப்பட்டது.
2021 ஜனவரி முதலாம் திகதிக்கு பின்பு பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் தற்போது வழங்கப்படும்.
இது ஒரு “வரலாற்று மைல்கல்” என அமைச்சர் அபேரத்ன பாராட்டியுள்ளார். இந்த சேவையை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்காக தபால் அலுவலகத்துடன் ஒரு முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

