Wednesday, March 25, 2026 3:04 pm
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கணக்கியல் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி இன்று புதன்கிழமை பதவி ஏற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து, துணைவேந்தர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் அவர் பொறுப்பேற்றார்.
பதவி ஏற்பு நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர் எஸ். சிறிசற்குணராசா, பதிவாளர் காண்டீபன், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியரான சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

