Friday, January 16, 2026 9:42 am
இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
ஜனவரி 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மாவின் விலை குறைக்கப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
400 கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 125 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

