Tuesday, February 10, 2026 11:32 am
இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தொடரின் இணை நடத்துனர் என்ற வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் (ICC) இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. அத்துடன் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை இலங்கை இன்னும் மறக்கவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியிருந்தது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இந்திய அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் களமிறங்குமாறு தேசிய கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது.

