Wednesday, March 11, 2026 11:13 am
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் ஏற்பட்ட இந்த மின்சாரத் தடையினால் கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம், அனுராதபுரம் ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கின.
மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளே இந்த திடீர் மின்சாரத் தடையிற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.
ஐந்து தசாப்த கால வரலாற்றைக் கொண்ட இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டு, 6 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டதை எதிர்த்து மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

