Monday, December 1, 2025 10:23 am
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் நிவாரண ஏற்பாடுகளை மேற்கொள்ளவதற்கும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட இழப்புகளை அறிந்து கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பட்டப்பின் கற்கைகளுக்கான பட்டமளிப்பு விழா, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாநாடு, பொறியியல் கண்காட்சி என்பனவும் பிற்போடப்பட்டுள்ளன.

