Sunday, October 26, 2025 7:12 am
யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிச் சென்ற 18 வயது இளைஞன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, சட்டத்திற்கு முரணானது என தமிழ்த் தேசிய கட்சியின் மூத்த தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என். சிறீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
சட்டவிரோத மண் அகழ்வுக்கு பொலிஸாரும் படையினரும் துணைபோகும் நிலையில். சட்டத்தை நிலைநாட்டுவதாகக் கூறிக் கொண்டு தமிழ் மக்கள் மீது சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
துப்பாக்சுட்டுக்கு இலக்கான இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் சட்டத்துககு மாறான இச் செயற்பாடு தொடர்பாக சிறீகாந்தா கடும் கணடனம் வெளியிடுள்ளார்.
உழவு இயந்திர சாரதியான 18 வயது இணைஞன், சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்கிறார் என கண்டறிந்தால், வழிமறித்து விசாரணை நடத்தியிருக்கலாம். அவ்வாறு நிற்காமல் சென்றிருந்தால், உழவு இயந்திரத்தின் சில்லுக்கு சுட்டிருக்கலாம். அல்லது இளைஞனின் காலில் சுட்டிருக்கலாம்.
ஆனால் பொலிஸார் வேண்டுமென்றே, இளைஞனின் உடலில் துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். இதனை ஏற்க முடியாது என்றும், பொலிஸார் பொறுப் கூற வேண்டும் எனவும் வலியுறுத்திய சிறிகாந்தா, எந்த ஒரு குற்றம் செய்த நபரையும் பொதுவெளியில் வைத்து கொலை செய்யவோ காயப்படுததவோ பொலிஸாருக்கு உரிமை இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் 2018 ஆம் ஆண்டும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக வடமாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக கூறி இளைஞர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் கூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

