Wednesday, October 22, 2025 5:53 am
ரசிய ஜனாதிபதி விளாடிமின் புட்டின் ஹங்கேரிக்கு செல்லும் வழியில், தமது நாட்டு வான் வழியாக சென்றால் கைது செய்யப்படுவார் என போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் (Radoslaw Sikorski) சிகோர்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ரெய்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ரசிய – உக்ரெயன் போரை நிறுத்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஏற்பாட்டில் ஹங்கேரியில் சமாதான பேச்சுவரர்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. அங்கு ட்ரம்ப் – புட்ன் ஆகியோர் சந்தித்து உரையாடவுள்ளனர்.
இந்த நிலையில். தமது வான்வழியாக புட்டின் பயணிக்க முடியாதென போலந் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரெய்னில் பெரும் மனிதப்படு கொலைகளில் ரசியா ஈடுபடுவதால், சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவைப் பெற்று புட்டின் கை செய்யப்படுவார் என அமைச்சர் ராடோஸ்லாவ் கடும் தொனியில் எச்சரித்திருக்கிறார்.
ஹங்கேரி நாட்டுக்கு செல்வதானால், ரசிய ஜனாதிபதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றின் வான்வெளி வழியாகப் பயணம் செய்ய வேண்டும். ஆனால் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கின்றன.
ஆனால், ஹங்கேரி அந்த நீதிமன்றத்தின் உறுப்புரிமையில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இச் சர்ச்சை எழுந்துள்ளது.
அதேவேளை ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஆர்பன் மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை விட ரசியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறார். புடின் சமதான பேச்சுக்காக ஹங்கேரி நாட்டுக்குள் வருவதற்கான பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், மீண்டும் அவர் ரசியாவுக்குத் திரும்புவதற்கான பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக ரசிய – உக்ரெயன் போர் நிறுத்த பணிக்கு, பல்கேரியா உதவுமானால், புட்டின் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கத் தயாராக இருப்பதாக பல்கேரிய செய்தி நிறுவனம் BTA அறிவித்துள்ளது.
பல்கேரிய அரசு, ரசிய – உக்ரெயன் சமதான பணியை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஆனால் அது பற்றி ரசியா இதுவரை எதுவும் கூறவில்லை.