Wednesday, October 29, 2025 10:55 am
கென்யாவின் கடற்கரைப் பகுதியான குவாலே மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொருங்கியது.
மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்ல விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மலைப் பிரதேசத்தில் தரையில் விழுந்து விமானம் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் எட்டு ஹங்கேரியரும், இரண்டு ஜெர்மனியரும், கென்யாவைச் சேர்ந்த ஓர் விமானி என மொத்தம் 11 பேர் பயணித்திருந்ததாகவும், யாரும் உயிர் தப்பவில்லை என மொம்பாசா ஏர் சஃபாரி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பொலிஸார், விபத்து குறித்து கென்ய விமான படையினருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

