Monday, December 8, 2025 12:08 pm
நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே இளஞ்சிவப்பு கண் நோய் பரவ வாய்ப்புள்ளது என வைத்திய நிபுணர் வைத்தியர் குசும் ரத்னாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பல மாவட்டங்களில் தற்போது பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதாகவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
இளஞ்சிவப்பு கண் நோய் தொடர்பில் பொது மக்கள் கூடுதல் கவனமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொற்று காற்று மற்றும் நெருங்கிய தொடர்பு மூலம் விரைவாக நோய் பரவுவதால் பாதிக்கப்பட்ட நபர்களை முடிந்தவரை தனிமைப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே கண் பிரச்சினைகள் உள்ளவர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவுவதைத் தடுக்க சவர்க்காரம் மற்றும் சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கைகளைக் கழுவுமாறு அதிகாரிகள் பொது மக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.

