Wednesday, March 11, 2026 10:26 am
பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் நேற்று இரவு தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களை பாலர் பாடசாலைகளாக கருதி சட்டங்களை உருவாக்கி, சுற்று நிருபங்களை வெளியிட்டு மாணவர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முயல்வதாக கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாணவர்களின் எழுச்சியையும் ஒற்றுமையையும் தடுப்பதற்காகவே இவ்வாறான சுற்று நிருபங்கள் மூலம் மாணவர் அடக்குமுறை முன்னெடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சுமத்தினர்.

