அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நீண்ட நாள் ஆசையான அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் ஆரம்பமானது.
அமெரிக்காவின் அடையாளமாகவும் அந்நாட்டு ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாக வெள்ளை மாளிகை காணப்படுகிறது. வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதி கட்டடம் 1902ம் ஆண்டு கட்டப்பட்டது. இறுதியாக 1942ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.
ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகையின் ஒருபகுதி இடிக்கப்பட்டு போல்ரூம் (ballroom) அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அவரின் ஆசைப்படி அதற்கான கட்டுமான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இந்த போல்ரூம் ரூ.2200 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் “நாட்டின் ஒவ்வொரு ஜனாதிபதியும், வெள்ளை மாளிகை வளாகத்தில் மிகப் பிரமாண்ட விருந்துகள், கலைநிகழ்ச்சிகளுக்காக மக்களைத் தங்க வைக்க ஒரு பால்ரூம் வேண்டும் என்று 150 ஆண்டுகளுக்கும் மேலாகக் கனவு கண்டு வந்தனர். வரி செலுத்துவோருக்கு எந்த சிரமமும் இன்றி இந்த கனவை செயல்படுத்திய முதல் ஜனாதிபதி நான் என பெருமைப்படுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
