Monday, December 1, 2025 10:39 am
“டித்வா புயல்” காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற அமர்வுகள் இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று மற்றும் நாளை ஆறு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்புகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. குறித்த விவாதங்கள் காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை நடத்தப்படவுள்ளன. வரவு செலவுத் திட்ட விவாதம் நீண்ட நேரம் நடைபெறுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, புத்தசாசனம் மத மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுகளின் செலவினத் தலைப்புகள் இன்று விவாதிக்கப்படவுள்ளன.
வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுகளின் செலவினத் தலைப்புகள் நாளை விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

