Thursday, December 18, 2025 10:53 am
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை (18) சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ,
மு.ப. 09.30 – மு.ப. 09.45 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 09.45 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் (01 வினா).
மு.ப. 10.00 – பி.ப. 5.30 மோசமான காலநிலையின் தாக்கத்தால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம்.
நாளை 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெற இருக்கின்றது.
நாளைய அமர்வில் 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்படவுள்ளது.

