Monday, March 23, 2026 3:02 pm
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை அறவிடும் நடைமுறை இன்று முதல் மீண்டும் அமுல்படுத்தப்படுவதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் வாகனத் தரிப்பிடக் கட்டண அறவீட்டுப் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் நிலவிய நீண்ட வாகன வரிசைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்களைக் கருத்திற் கொண்டு, கடந்த மார்ச் 18ஆம் திகதி முதல் தரிப்பிடக் கட்டண அறவீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (National Fuel Pass) முறைமை மற்றும் வாகனப் பதிவு இலக்கங்களுக்கு அமைவாக எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை காரணமாக, எரிபொருள் வரிசைகள் குறைவடைந்து வீதிப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது. இந்தச் சாதகமான சூழலையடுத்தே கட்டண அறவீட்டை மீண்டும் ஆரம்பிக்க மாநகர சபை தீர்மானித்துள்ளது.

