Friday, February 27, 2026 2:13 pm
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது.
தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்து கொண்டார்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
கடந்த முறை தனியாக போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி இந்த சட்டசபை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், திராவிட முன்னேற்ற கழக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துக்கொண்டார்.

