பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இதன் போது பளையிலுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணி சுமார் 900 ஏக்கர் ஜனதா மக்கள் பெருந்தோட்ட சபை என்ற அமைப்பினால் சட்டவிரோதமான முறையில் சிலோபவுண்டேசன் என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இக் காணியை அவர்களுக்கு சட்டபூர்வமாக்குவதற்கு என்பீபீ (NPP) தரப்பு மேற்கொண்ட முயற்சியை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்தினார்.
தனியார் காணிகளில் இருந்து படையினர் வெளியேற வேண்டுமென மக்கள் 16 வருடங்களாக கோரி வருகின்ற நிலையில் பளைப் பகுதியில் படையினர் வசமுள்ள இரண்டு தனியார் காணிகளை குறிப்பிட்டு அக் காணிகளது உரிமையாளர்கள் மட்டுமே தமது காணிகளை விடுவிக்க கோரியுள்ளார்கள் என்றும் ஆகவே அக் காணிகளை விடுவிக்க வேண்டுமா என ஒருங்கிணைப்புக்குழுவிடம் அனுமதி கோரும் தலைகீழ் கேள்வியும் நடைமுறையையும் முன்வைத்தார்.
அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவர்கள் பளையிலுள்ள தனியார் காணிகள் விபரம் பிரதேச செயலகத்திடம் உள்ளது. அந்த விபரங்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஊடக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவுக்குச் சமர்ப்பித்து அவை அனைத்திலிருந்தும் இராணுவம் வெளியேற வேண்டுமென்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
இக்கருத்தை பிரதேச சபை தவிசாளர் சுரேன் ஆமோதித்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் பிரதிநிதி வீராவும் ஆமோதித்ததுடன் சபையும் ஆமோதித்தது.

