Monday, February 9, 2026 4:08 pm
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் (ICC) மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்வதில் ஒரு இணக்கமான தீர்வை ஆராய PCB உறுப்பினர்கள், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல்லுடன் இணைந்து லாகூரில் ஐசிசி தூதுக்குழுவைச் சந்தித்தனர்.
உலகப் போட்டிகளில் இந்தியாவைப் புறக்கணிப்பது குறித்த தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டுமானால், PCB ஐசிசியிடம் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியிடம் பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்:
- ஐ.சி.சி வருவாயில் அதிகரித்த பங்கு
- இந்தியாவுடனான இருதரப்பு கிரிக்கெட்டை மீட்டெடுப்பது.
- கைகுலுக்கும் நெறிமுறையை மீண்டும் அமுல்படுத்துதல்
நடுநிலையான இடத்தில் போட்டி திட்டமிடப்பட்டிருந்தாலும், பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் T20 உலகக் கிண்ணத்தில் விளையாட அனுமதிக்கப் போவதில்லை என பாகிஸ்தான் அரசு பகிரங்கமாக அறிவித்தபோது சர்ச்சை தொடங்கியது.
ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவுடன் விளையாட புறக்கணித்ததற்கான காரணங்களை தெளிவாகக் கூறவில்லை.

