Thursday, February 19, 2026 1:36 pm
ICC T20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 8 சுற்றுக்கு இறுதி அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
ஏற்கெனவே நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்காவை வென்றிருந்த பாகிஸ்தான், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நமீபியாவுக்கெதிரான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே சுப்பர்8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது.
200 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நமீபியா 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று 102 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பர்ஹான் தெரிவானார்.

