Saturday, October 25, 2025 3:31 pm
இந்தியாவில் மத்தியப் பிரதேசம் முழுவதும் மூன்று நாட்களில், 122 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 14 பேர் கார்பைடு துப்பாக்கியுடன் விளையாடியதால் பார்வையை இழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 அன்று வெளியிடப்பட்ட அரசாங்கத் தடையை மீறி, உள்ளூர் சந்தைகள் கச்சா “கார்பைடு துப்பாக்கிகளை” வெளிப்படையாக விற்பனை செய்தன. தற்காலிக சாதனங்கள் பொம்மைகளைப் போல தயாரிக்கப்பட்டு இவை விற்கப்படுகின்ற அதே நேரம் அவை குண்டுகளைப் போல வெடிக்கின்றன.
போபால், இந்தூர், ஜபல்பூர் மற்றும் குவாலியரில் உள்ள மருத்துவமனைகள் முழுவதும் இந்த துப்பாக்கிகளால் காயமடைந்த நோயாளிகளால் நிரம்பியுள்ளன. போபாலின் ஹமீடியா மருத்துவமனையில் மட்டும் 72 மணி நேரத்தில் 26 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.

