Monday, December 29, 2025 10:51 am
நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மருதங்கேணி – தாழையடி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே மேற்படி காணாமல் போயுள்ளார்.
சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது.
மேலும் இது குறித்த மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

