Friday, March 6, 2026 11:30 am
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ள குருநகர் இறங்கு துறையிலிருந்து சென்ற பக்தர்களின் படகு ஒன்று நீரில் மூழ்கியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய பக்தர்களை மீட்கும் பணி தொடருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் பயணம் படகில் செய்தனர். இதுவரை மூன்று பேர் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றப்பட்டு இன்று 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணை பெரு விழாவும், நாளை 07ஆம் திகதி சனிக்கிழமை தேர் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

