Monday, October 27, 2025 12:43 pm
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை 33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்பு பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

