Monday, December 15, 2025 4:45 pm
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பன்னீர்செல்வத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொள்ள அந்தக் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் டில்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியை பதிவு செய்யவே இந்த பயணத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்த அறிக்கையில், உரிமை மீட்பு குழு என்பதற்கு பதிலாக உரிமை மீட்பு கழகம் என மாற்றப்பட்டுள்ளது.
மேலும் , எதிர்வரும் 23ஆம் திகதி அல்லது எம்ஜிஆர் நினைவு தினத்தில் முறைப்படி புதுக்கட்சியை அறிவிக்க ஓ. பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

