Wednesday, November 19, 2025 10:04 am
மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர உயிரிழந்தார். அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை நேரில் சென்ற வடக்கு மாகாண ஆளுநர், பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் உறவினர்களுக்கு தனது இரங்கல்களையும் தெரிவித்தார்.

