Saturday, November 1, 2025 11:45 am
ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் மோடி அதிகாரத் துஸ்பிரயோகம் போன்றவற்றை நீக்கம் செய்து திறம்பட செயல்படும் என்று இலங்கை மக்களில் 38.7 சதவீதம் பேர் மாத்திரமே நம்புவதாக மதிப்பீட்டு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) நடத்திய நல்லிணக்கம், பொறுப்புணர்வு உள்ள நிர்வாகம் மற்றும் செயலில் உள்ள குடியுரிமை குறித்த தேசிய பொதுக் கருத்து ஆய்வில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மன் கூட்டாட்சி வெளியுறவு அலுவலகம் இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு நிதி ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.
கடந்த கால அரசாங்கங்கள் ஊழல் மோசடியை கையாள்வதில் திறம்பட செயல்பட்டதாக 12.5 சதவீதம் பேர் மாத்திரமே நம்புவதாக அந்த மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது.
இந்த மதிப்பீட்டின் பிரகாரம், 48.5 சதவீத மக்கள் நல்லிணக்கத்தின் அர்த்தத்தை ஒற்றுமை மற்றும் இன குழுக்களுக்கு இடையிலான நேர்மறையான உறவுகள் அவசியம் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.
இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணக் கரு படிப்படியாக மக்களிடம் மேலோங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

