Monday, December 1, 2025 4:34 pm
காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கும் நபர்கள் மீது டிசம்பர் 25 வரை, சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை சரியான நேரத்தில் புதுப்பிக்க முடியாமல் போனதால் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025ம் ஆண்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 வரையான காலப்பகுதியில் காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படாமல் தொடர்ந்து வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலத்தில் காலாவதியான உரிமங்களுடன் வாகனம் ஓட்டும் நபர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் உரிமங்களைப் புதுப்பித்துக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

