Tuesday, February 17, 2026 3:14 pm
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.
174 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 15.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
கனடா அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய நியூசிலாந்து அணி, ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

