Thursday, March 5, 2026 2:37 pm
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து அணி 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணியானது எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை எடுத்தது.
நியூஸிலாந்து அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டிம் சீஃபர்ட் மற்றும் ஃபின் அலன் ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்காக 9.1 ஓவர்களில் 117 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
டிம் சீஃபர்ட் 33 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை எடுத்தார். பின் அலன் 33 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கலாக சதம் விளாசினார்.
இந்த சதம் மூலம் ஃபின் அலன் சர்வதேச T20 உலகக் கிண்ண அரங்கில் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார். மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களை அடித்ததன் மூலம் வேகமான ஆடவர் T20 உலகக் கிண்ணத்தை பதிவு செய்திருந்தார். ஆனால் அலன் 33 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களை அடித்து அந்த சாதனையை முறியடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

