Friday, October 31, 2025 1:29 pm
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளராக பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் முன்னர் வடக்கு மாகாண சபையின் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் மற்றும் வடக்கு மாகாண பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைவாக, இவருக்கான நியமனக் கடிதம் நேற்றைய தினம் (30) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வழங்கப்பட்டிருந்தது.


