புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படவுள்ள பாடத் திட்டங்களின் வழிகாட்டல் பொறிமுறை தொடர்பாக, ஆசிரியர்களுக்கான செயலமர்வின் கள ஆய்வொன்று இன்றைய தினம் (18) தீவகக் கல்வி வலயத்தால் முன்னெடுக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு முதல் தரம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டத்திற்கேற்ப ,தீவகக் கல்வி வலயத்தின் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களின் ஆசிரியர்களுக்காகவே குறித்த செயலமர்வின் வெளிக்கள ஆய்வு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது நில அமைவுகள், சூழலின் அக புறத் தன்மைகள் மற்றும் தாவரங்களின் இனப் பரம்பல், நீர் நிலைகளின் அவதானிப்புகள் குறித்து ஆசிரியர்களுக்கு கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
