Tuesday, October 28, 2025 11:05 am
இலங்கை மத்திய வங்கிக்கு 2023ஆம் ஆண்டு 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் விதிமுறைகளுக்கமைய, இரண்டு புதிய பிரதி ஆளுநர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவால் இவர்கள் இருவரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக சி. அமரசேகர, மற்றும் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைவாக 24 ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

