Monday, January 5, 2026 11:31 am
இலங்கையில் தரம் 1 மற்றும் தரம் 6 தவிர்ந்த ஏனைய அனைத்து ஆண்டுகளுக்கும் 2026ம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தரம் 01க்கான கல்வி நடவடிக்கைககள் ஜனவரி 21ம் திகதியும், தரம் 06க்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29ம் திகதியும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பாடசாலைகளின் தரம் 5 மற்றும் தரம் 6-13 வரையான தரங்களுக்காக 2026ம் ஆண்டின் புதிய பாடசாலைத் தவணை பி.ப. 2.00 மணி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் இலங்கைத்தீவில் இடம்பெற்ற அனர்த்தத்தில் குறிப்பாக சில மாகாணங்களில் பாடசாலைகளும், மாணவர்கள் பயணிக்கும் வீதிகளும் கடும் சேதத்துக்குள்ளாகியிருந்தது.
இவ்வாறான சேதங்களைக் கருத்திற்கொண்டு பாடசாலை நேரத்தை நீடிப்பதன் மூலம் அந்த மாகாணங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கும் ஏனைய தரப்பினருக்கும் பல சிரமங்கள் ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனால் நாடும், நாட்டு மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இத்திட்டம் அமுல்படுத்தப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



