Saturday, November 8, 2025 7:04 pm
இந்திய – இலங்கை வர்த்தகச் செயற்பாட்டில் இலங்கை நஷ்டமடைந்து வருவதாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ரவி கருணாநாயக்கா இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
வரவு செலவுத் திட்ட விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் கேள்வி எழுப்பிய அவர், இந்திய-இலங்கை இருதரப்பு வர்த்தக அளவு அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இந்த வளர்ச்சியின் மூலம் இலங்கை லாபம் பெற்றதாக கூற முடியாது எனவும். ரவி கருணாநாயக்கா குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடைமுறைக்கு வந்ததாகவும், இரு தரப்பும் 2008 ஆம் ஆண்டு கட்டண தாராளமயமாக்கலை நிறைவு செய்ததாகவும் கூறினார்.
கடந்த வருடம் இந்திய சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதி 884 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதேசமயம் இறக்குமதிகள் 3.76 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாகவும் இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே இந்திய – இலங்கை அரசுகளினால் முன்மொழியப்பட்ட எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Economic and Technology Cooperation Agreement – தீர்வு என்று கூறினார்.
இந்த எட்கா தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு பொருத்தமான இராஜதந்திரிகளை நியமிக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டதாகவும் கூறிய ரவி கருணாநாயக்கா, இந்தியா முன்னர் விடுத்த அக் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஞாபகப்படுத்தினார்.
உலகளாவிய சூழலை நாம் புறக்கணிக்க முடியாது. 2027 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது.
இந்த மாற்றம் வெளிவருகையில், இந்தியாவின் விநியோகச் சங்கிலிகள், தளவாடங்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இலங்கை தன்னை ஒரு பங்காளியாக, செல்வாக்கு செலுத்துபவராக மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு சூழலை உருவாக்க அரசாங்கம் முற்பட வேண்டும் என்று ரவி கருணாநாயக்கா வலியுறுத்தினார்

