Wednesday, December 10, 2025 8:11 pm
டித்வா புயலினால் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்றால், அது தொடர்பில் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தில் 30 ஆம் இலக்க அறையில் இயங்கும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புயலினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் நிதி உதவி பெற தகுதியானவர்களின் பெயர் விபரம் இன்று புதன்கிழமை முதல் பிரதேச செயலக ரீதியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதனை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட எவரேனும் ஒருவரின் பெயர் இணைக்கப்படாது இருந்தால் அல்லது தவறான வழியில் எவரேனும் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தால், ஆதாரங்களுடன் அவை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் யாழ். மாநகர சபை உறுப்பினர் எஸ். கபிலன் அறிவித்துள்ளார்.

