Wednesday, November 19, 2025 2:19 pm
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் குறித்த சந்தேகங்கள் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருந்தன.
நாமல் ராஜபக்ச லண்டனில் City University of Londonஇல் பெற்ற சட்டமாணி சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் சிக்கல் உள்ளது எனவும், அவர் கற்ற சட்டக் கல்லூரி அதை ஏற்கவில்லை எனவும் அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ச தன்னிடம் இருப்பதாகக் கூறப்படும் பட்டம் குறித்து சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பரீட்சையில் மோசடி செய்தே முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச சட்டத்தரணியானார் என தெரிவித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

