Thursday, February 12, 2026 2:50 pm
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கழிவு கொட்டுபவர்கள் அடையாளப்படுத்தி அபராதம் அறவிடப்படும் பணிகள் நல்லூர் பிரதேச சபையினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கழிவுகளைக் கொட்டுகின்ற செயற்பாடுகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஐந்து மாத காலத்தினுள் நான்கு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் நல்லூர் பிரதேச சபைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
குற்றச்செயல்களை குறைக்கும் வகையில் மேலும் பல காண்காணிப்பு கமராக்களினை பொருத்தும் நடவடிக்கையினை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளது.

