Wednesday, December 3, 2025 11:58 am
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் முல்லைத்தீவில் உள்ள பிரதான நாயாறு பாலம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தது.
கிராம அமைப்புக்களின் கோரிக்கையையடுத்து சேதமடைந்த முல்லைத்தீவு பிரதான நாயாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பாலம் இடிந்து விழுந்ததன் விளைவாக, முல்லைத்தீவிலிருந்து வெலி ஓயாவிற்கும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கும் மற்றும் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய்க்கும் பயணிக்கும் அனைத்துப் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் மேலும் தெரிவித்தது.
மேலும் , டித்வா புயலின் காரணமாக பல பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அதிகளவிலான போக்குவரத்து தடைப்பட்டது. இந்த நிலையில் சேதமடைந்த பாலங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

