Friday, December 5, 2025 8:20 am
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட “இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல் நிதி” (Rebuilding Sri Lanka Fund) இதுவரை 697 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
635 மில்லியன் ரூபா இலங்கை வங்கிக் கணக்கின் ஊடாக பெறப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய வங்கி கணக்குகள் மூலம் 61 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
33 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வைப்புத் தொகைகள் மற்றும் பங்களிப்பாளர்களின் 30,470 நன்கொடையில் இத் தொகை பெறப்பட்டுள்ளதாக சூரியப்பெரும சுட்டிக்காட்டினார்.

