Monday, March 9, 2026 11:26 am
2026ம் ஆண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 3,600-க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 3,642 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கள் பதிவான நிலையில் அவற்றில் 1,730 பேர் காயமடைந்துள்ளனர்.

