Wednesday, December 10, 2025 11:38 am
கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமானம் மாயமானதால் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3½ கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு எம்.எச்-370 என்ற மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 12 பணியாளர்கள் உள்பட 239 பேர் பயணித்தனர்.
நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
இதுவரையில் காணாமல்போன விமானம் கண்டுபிடிக்காத நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விமானத்தை மீண்டும் தேட உள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் அண்மையில் அறிவித்தது.
ஆனாலும் காணாமல் போன விமானம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பீஜிங் நீதிமன்றத்தில் நடந்து வருகின்ற நிலையில் விமானம் குறித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

