Thursday, March 5, 2026 12:26 pm
யாழ்ப்பாணம், காங்கேசன் துறை ஊரணி கடற் பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில், அவர்கள் தமிழ்நாடு அரியமான் கடற் பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது. இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லையில் விட்டு விட்டு சென்றனர்.
பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்குள் சென்ற நிலையில் இன்று வியாழக்கிழமை ஏழாவது நாள் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கப்பட்டுள்ளது.

