Friday, November 21, 2025 4:43 pm
2025ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் தெரிவு செய்யப்பட்டார்.
சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் “மிஸ் யுனிவர்ஸ்” வருடாந்த போட்டியில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த ஆண்டு கலந்து கொண்டனர். இந்த போட்டி தாய்லாந்தில் இடம்பெற்றது.
வெற்றி பெற்ற பாத்திமாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தை தாய்லாந்தின் பிரவீனர் சிங் பிடித்திருந்தார். அதேநேரம் மூன்றாவது இடத்தை வெனிசுவேலாவின் ஸ்டெபனி அபாசாலி பிடித்திருந்தார்.

