Sunday, October 26, 2025 5:00 pm
மின்துறை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷனுக்கு வழங்கப்பட்ட ஒரு வருட சேவை நீடிப்பை எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி இரத்து செய்துள்ளார். அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால, இந்த சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.
ஆனால் அமைச்சர் குமார ஜயக்கொடி இரத்துச் செய்துள்ளதன் மூலம், அரசாங்கத்துக்குள் முரண்பாடு என்ற தகவல் கொழும்பில் வெளியாகியுள்ளது.
நிரோஷன் முதலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் ஒரு வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டார், அது 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி முடிவடைந்தது.
எனினும், அமைச்சின் செயலாளர் அவரது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்திருந்தார் – அத்தகைய நியமனத்தை வழங்குவதற்கு தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக அமைச்சர் உறுதிசெய்து, அந்த சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.
ஆனால் அந்த முடிவை அமைச்சர் குமார ஜயக்கொடி இப்போது ரத்து செய்துள்ளார்.

