Tuesday, October 28, 2025 3:29 pm
இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான மைக்கேல் கோர்ஸ், 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை வழங்கிய செயலை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) வரவேற்றுள்ளது.
நீண்டகாலமாக நிலவும் பட்டினியை போக்கும் கண்காணிப்பு பிரச்சாரத்தின் (Watch Hunger Stop campaign) மூலம் வழங்கப்படும் இந்த பங்களிப்பு, உலக உணவுத் திட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்க பங்களிக்கும்.
இந்த நிதியானது, எட்டு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை பத்து மாவட்டங்களாக விரிவுபடுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 250,000 மாணவர்கள் நாளாந்தம் போசாக்கான உணவைப் பெறுவதை உறுதி செய்யும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடுகளை, போசாக்கான உணவுகள் மூலம் நிவர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கு உலக உணவுத் திட்டம் பல உதவிகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

