Monday, January 12, 2026 2:06 pm
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தனது தளங்களில் இருந்து சுமார் 5,50,000 கணக்குகளை முடக்கியுள்ளது.
நடைமுறைக்கு வந்த புதிய சட்டத்தின்படி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் த்ரெட்ஸ் போன்ற தளங்களில் 16 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய சிறுவர்கள் கணக்கு வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் 3,30,639 கணக்குகளையும், பேஸ்புக்கில் 1,73,497 கணக்குகளையும், த்ரெட்ஸ் தளத்தில் 39,916 கணக்குகளையும் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

