Monday, February 23, 2026 4:03 pm
‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த ரயில் இன்று இரவு 07.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
https://seatreservation.railway.gov.lk என்ற இணையத்தள இணைப்பின் ஊடாக ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்றும் இந்த ரயிலுக்கான ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

