Wednesday, April 8, 2026 11:25 am
இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி தங்கவிலை 7000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுண் 405000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 372600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46575 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரானுடனான போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

