Monday, March 23, 2026 11:47 am
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய சரிவைக் கண்டுள்ளது.
இலங்கையில் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று 8,000 ரூபாவால் குறைந்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,371 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு அவுண்ஸ் 65.62 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

