Wednesday, March 11, 2026 4:22 pm
வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் “எக்கோ ரூறிசம் திட்டம்” அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வும் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதனால் இந்த முறைப்பாடு இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மண்டைதீவில் சுற்றுலா அமைச்சினால் அமைக்கப்பட்ட “எக்கோ ரூறிசம்” திட்டம் தோல்வியடைய அன்றிருந்த அரச அதிகாரிகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

